மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக நாங்கள் உழைக்கிறோம். ACT அரசாங்கமும் அரச அதிகாரிகளும், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும் முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் உங்கள் மனித உரிமைகளை மதிக்கிறார்களா என்பதை உறுதிசெய்ய நாங்கள் உழைக்கிறோம்.
பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவு மக்களின் உரிமைகள் உட்பட மனித உரிமைகளை அவர்கள் மதிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த சட்டங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம்
அலெக்சாண்டர் மகோனோச்சி மையத்தில் (AMC) உள்ள கைதிகளின் மனித உரிமைகளை நாங்கள் கண்காணிக்கிறோம். நாங்கள் பிம்பேரி இளைஞர் நீதி மையம் (Bimberi Youth Justice Centre) மற்றும் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிற இடங்களையும் கண்காணிக்கிறோம்
மனித உரிமைகளை மேம்படுத்துகின்ற நீதிமன்ற வழக்குகளில் பங்கேற்கிறோம்.
சுகாதாரச் சேவைகள் மற்றும் சுகாதாரப் பயிற்சியாளர்கள், பாகுபாடு, ஊனமுற்றோர் சேவைகள், குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கான சேவைகள், முதியோர் துஷ்பிரயோகம் அல்லது ஊனமுற்றோரை துஷ்பிரயோகம் செய்தல், பாலியல் துன்புறுத்தல், இனவெறி, குடியுரிமைச் தகராறுகள் மற்றும் உரிமைச் சாசனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி நீங்கள் எங்களிடம் புகார் செய்யலாம்.
பின்வரும் சந்தர்ப்பங்களில் நீங்கள் புகார் செய்யலாம்:
• வழங்கப்பட்ட சேவையில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால்
• ஒரு சேவை வழிகாட்டுதல்களை அல்லது நல்ல தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால்
• உங்களுக்கோ அல்லது நீங்கள் பராமரிக்கும் ஒருவருக்கோ ஒரு சேவை கிடைக்கவில்லை என்றால்.
உங்கள் கவலைகளைத் தீர்ப்பதற்கு உங்களுக்கு உதவ நாங்கள் உங்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.
• மொழிபெயர்ப்பு மற்றும் பேச்சு மொழிபெயர்ப்புச் சேவை ஊடாக 131450 இல்அல்லது தொலைபேசி (02) 6205 2222 இல் எங்களை அழைக்கவும்
• மின்னஞ்சல் human.rights@act.gov.au
• 56 Allara St Canberra ACT 2601 இல் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள்
• எங்கள் hrc.act.gov.au/complaints இணையத்தளத்தில் புகார்களை தெரிவியுங்கள்